எங்கள் சேவைகளை ஆய்வு செய்க
HS-குறியீட்டு உரிமம் தொடர்பான அனுமதி
HS-குறியீடு மற்றும் பெயர் மூலம் தேடுக
பரிந்துரைக்கப்பட்ட அதிகாரசபைகள்
- தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம்
- கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
- ஆயுர்வேத
திணைக்களம் - ஹோமியோபதி
கவுன்சில் - சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு
- இலங்கை சிவில் விமானப்
போக்குவரத்து அதிகாரசபை - கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு
- பாதுகாப்பு
அமைச்சு - இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்
- தேசிய அபாயகர ஔடதங்கள்
கட்டுப்பாட்டு சபை - கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
- பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு
- பூச்சிக்கொல்லிகளின்
பதிவாளர் - தேசிய உர
செயலகம் - விவசாயத்
திணைக்களம் - இலங்கை கட்டளைகள்
திணைக்களம் - இலங்கை மதுவரித்
திணைக்களம் - இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
- தேசிய ஓசோன்
அலகு - மத்திய சுற்றாடல்
அதிகாரசபை - இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை
- இலங்கை தேயிலை
வாரியம் - வன பாதுகாப்புத்
திணைக்களம் - இலங்கை
மத்திய வங்கி - கடல் மாசுறல் தடுப்பு
அதிகார சபை - இலங்கை
சுங்கம் - இலங்கை துறைமுக
அதிகாரசபை
Inner Pages
Inner Pages
இப்பக்கம் நிர்மாணிக்கப்படுகிறது
வகை | விண்ணப்பம் |
மருந்துகள் | Download [PDF - 499 KB] |
வாகனங்கள் மற்றும் வாகன பாகங்கள் | Download [PDF - 499 KB] |
இரசாயனங்கள் | Download [PDF - 499 KB] |
தொலைத்தொடர்பு சாதனங்கள் | Download [PDF - 499 KB] |
இதர இறக்குமதிகள் | Download [PDF - 499 KB] |
ஏற்றுமதிகள் | Download [PDF - 499 KB] |
1969 ஆம் ஆண்டின் 1ம் இலக்க சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் 50 வருடங்களாக தமது செயற்பணியினை நாட்டுக்காக மேற்கொள்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு செய்யும் நோக்கினை முன்னிலைப்படுத்தி இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது அதற்குரிய கொள்கை உருவாக்குனர்களின் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
தற்பெழுது திணைக்களத்தின் பணி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முறைமையினை அமுல்படுத்துவதையும் கடந்து சர்வதேச வர்தகம் பற்றிய கொள்கை ரீதியான தீர்மானம் எடுப்போராகவும் செயற்படுகின்றது. இத்திணைக்களம் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் நலன்புரி, சுற்றாடல் மற்றும் பொது சகாதார பாதுகாப்பு ஆகியவற்றை பிரதான குறிக்கோள்களாக கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு முறைமையிலிருந்து அவற்றிற்கான ஒழுங்கு முறைகளை மேம்படுத்தல் வரை வியாபித்திருக்கினறது.
மேலும் சர்வதேச வர்தகத்தில் இலங்கை அடையாளத்தினை பாதுகாக்கும் விதத்தில் ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக நியம முறையொன்றினை அறிமுகம் செய்தலும் இத் திணைக்களத்தின் பிரதான பணிகளில் உள்ளடங்குகின்றது. செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து அந்நிய செலாவணிக் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளினை அமுல்படுத்துவதுவதற்கு நடவடிக்கை எடுத்தல் புதிய முன்னெடுப்பொன்றாகும்.
இலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட பேசல், ஸ்ரொக்கோம் மற்றும் றொட்டர்டாம் ஆகிய சர்வதேச சமவாயங்களினை பின்பற்றி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சுற்றாடலுக்கும் பொது மக்களுக்கும் கேடு விளைவிக்கின்ற கிளைபோசெற் போன்ற இரசாயன பதார்தங்களின் இறக்குமதி கட்டுப்பாடு அல்லது தடைசெய்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்துகள் தொடர்பாக இரண்டில் மூன்று பங்கு ஆயட்காலத்தினை கட்டாயமாக்குதல், காலாவதியான மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதனை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட முக்கியமான செயற்பாடாகும்.
இலங்கை சேது மார்கம் மற்றும் இந்து சமுத்திரத்தின் மிக விசேடத்துவமான இடத்தில் அமைந்துள்ளதுடன் சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் விசேடமாக மீள் ஏற்றுமதி மையமாக இனங்காணப்பட்டுள்ளது. சீனா மற்றும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகின்ற புதிய பொருளாதார மேம்பாட்டு நிகழ்சித்திட்டங்களில் தேசிய ரீதியாக உயர் கொள்கை வேலைச் சட்டகமொன்று இருத்தல் மிக முக்கியமாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுத் திணைக்களம் கடந்த காலங்களில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பில் கொள்கை ரீதியாக மிக முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளதுடன் சர்வதேச ரீதியாக வெளிநாடுகளுடன் பரஸ்பர தொடர்புகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கத்திய மருந்தியல்,கால்நடை மருத்துவம்,ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் ஆகியவற்றிற்கான இறக்குமதி உரிமங்கள் வழங்கல் மற்றும் பற்று வைத்தல்.
பாவிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களுக்கான இறக்குமதி உரிமங்கள் வழங்கல் மற்றும் பற்று வைத்தல்.
தொழில்துறை இரசாயனங்கள்,பெட்ரோலிய எண்ணெய்கள் மற்றும் அவை தொடர்புடைய தயாரிப்புகள்,பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள்,கதிரியக்க மூலகங்கள்,மது,ஆவி மற்றும் கூட்டுப் பொருட்களின் இறக்குமதி உரிமங்கள் வழங்கல் மற்றும் பற்று வைத்தல்.
கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல்தொடர்பு சாதனங்கள்,கணினிகள்,குளிரூட்டிகள்,குளிர் பதன வாயுக்கள் மற்றும் தொலை கட்டுப்பாட்டு பொருட்களுக்கான இறக்குமதி உரிமங்கள் வழங்கல் மற்றும் பற்று வைத்தல்.
கால்நடை மற்றும் கால்நடை உற்பத்திகள் உள்ளிட்ட இறக்குமதிகள்,கானாங்கெளுத்தி(மெகரல்) மீன் மற்றும் பேணி செய்யப்பட்ட மீன்,ஆற்றல் பானங்கள்,தேயிலை,தானியங்கள்,மீன் தூண்டில்,துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள்,விளையாட்டு உபகரணங்கள்,பயன்படுத்திய ஆடைகள், தளபாடங்கள்,கசடு எண்ணெய்,சிகரெட் பத்திரங்கள்,நாணயங்கள்,பிளாஸ்டிக் உணவு கொள்கலன்கள் உள்ளிட்ட இறக்குமதிகளுக்கான உரிமங்கள் மற்றம் உலோக கழிவுகள், மரத்துண்டுகளுக்கான ஏற்றுமதி உரிமங்கள் வழங்கல் மற்றும் பற்று வைத்தல்.
- வரவுசெலவுத் திணைக்களத்தில் செலவினங்களுக்கான வருடாந்த மதிப்பீட்டை தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல், அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீடுகளின் கட்டுப்பாட்டை உறுதி செய்ய செலவின பேரேட்டை முறையாக பராமரித்தல், வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட தொகைகள் போதாமல் போகின்ற செலவு விடயங்களுக்காக மேலதிக ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்ளல், நி.வி 66 படி செலவு விடயங்களுக்கிடையில் மாற்றங்களை மேற்கொள்ளல்.
- 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் அடிப்படையில் அறவிடப்பட வேண்டிய வருமானம் தொடர்பில் வருடாந்த மதிப்பீட்டை தயாரித்தல், அந்த மதிப்பீடுகளை அனுமதிப்பிற்காக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்துக்கு சமர்ப்பித்தல், வருமான மதிப்பீட்டை திருத்துதல், வருமானம் சேகரித்தல், வருமான பேரேட்டில் பதிவு செய்தல் மற்றும் வங்கியில் வைப்பிலிடுதல்.
- திணைக்களத்தின் வரவு செலவு தொடர்பாக காசுப்புத்தகத்தை பராமரித்தல்.
- இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ வங்கி கணக்கை பராமரித்தல்
- இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் வங்கி கணக்கிணக்க்க் கூற்றை மாதாந்தம் தயாரித்தல். அதனை அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளர், அரச கணக்கு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கான பிரதிகளுடன் கணக்காளர் நாயகத்திற்கு அனுப்புதல்.
- Payroll நிகழ்ச்சித் திட்டத்தினூடாக திணைக்கள உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளத்தை தயாரித்தல், உறுதிப்படுத்தல் மற்றும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
- கொடுப்பனவுகளுக்காக கிடைக்கப்பெறும் மீண்டுவரும், மூலதன செலவுகளுக்கான வவுச்சர்களை உறுதிப்படுத்தலும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலும்.
- அரச உத்தியோகத்தர்களுக்கான முற்பணக் கொடுப்பனவுகளுக்கான வவுச்சர்களை உறுதிப்படுத்தலும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலும்.
- CIGAS நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மாதாந்த கணக்கு சாராம்சத்தை தயாரித்து திறைச்சேரிக்கு அனுப்புதல்.
- அரச வருமானத்திலிருந்து மீளச்செலுத்த வேண்டிவை தொடர்பில் திறைச்சேரி செயற்பாடுகள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
- தேசிய அரசிறைத் திணைக்களத்திற்கு செலுத்தப்பட வேண்டிய பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, முத்திரை வரி ஆகியவற்றை பொது வைப்புக் கணக்கில் வைப்பிலிட்டு உரிய காலப்பகுதியில் தேசிய அரசிறைத் திணைக்களத்திற்கு செலுத்துதல்.
- மேற்குறிப்பிட்ட வரிகள் தொடர்பாக தேசிய அரசிறைத் திணைக்களத்திற்கு மாதாந்தம், காலாண்டு மற்றும் வருடாந்த அறிக்கைகளை அனுப்புதல்.
- வருடாந்த பொருள் கணக்கெடுப்பை உரிய காலத்தில் நடாத்தி அந்த அறிக்கையை அரச நிதித் திணைக்களத்திற்கான பிரதியுடன் கணக்காளர் நாயகத்திற்கு அனுப்புதல்
- எழுதுகருவிகள் மற்றும் இன்வென்றி களஞ்சிய சாலையைப் பராமரித்தல்.
- D/A ஒப்புதலுக்கு எதிரான ஆவணங்கள் மற்றும் திறந்த கணக்குகளுக்கான கொடுப்பனவுகளுக்கான அங்கிகாரத்தை வழங்குதல்.
- அந்நிய செலவாணி அடிப்படையில் அல்லாத இறக்குமதிகளுக்கான அங்கிகாரத்தை வழங்குதல்.
- சரக்கு வந்தடைய முன்னர்
- சரக்கு வந்தடைந்த பின்னர்
- இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் வர்த்தக வங்கிக்கும் சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுமதி வழங்கல்.
- கடன் கடிதத்தின் விதிகள் மீறப்படுமிடத்து அவற்றை விடுவிப்பதற்கான அனுமதி வழங்கல்.
- 50,000.00 அமேரிக்க டொலர்களுக்கு மேலதிக அந்நிய செலவானிக்கு வங்கி உத்தரவாதம் கிடைக்காதவிடத்து, அதற்கான அனுமதி வழங்கல்.
- மீள் ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கல்.
- இறக்குமதி, ஏற்றுமதிகளுக்கான ஒழுங்குவிதிகளை வர்த்தமானியினூடாக பிரசூரித்தல்
- பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட வர்த்தமானிப் பத்திரிக்கைகளுக்கான இயக்க வழிமுறைகளை வர்த்தக வங்கிகளுக்கு விநியோகித்தல்.
- திணைக்களத்தின் அனைத்து அலுவலர்களின் ஸ்தாபிக்கப்பட்ட விடயங்களை கையாளல்
- அலுவலக விதி மீறல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- திணைக்கள பதவியணியை பராமரித்தல்
- அலுவலர்களிடமிருந்து சொத்துக்கள் மற்றும் கடன்களின் அறிவிப்புகளைப் பெற்று அவற்றை பாதுகாப்பான காவலில் வைத்திருத்தல்
- ஃபைன் ப்ரெக்ட் (Finger Print) இயந்திரத்தைபயன்படுத்தி ஊழியர்களின் விடுமுறையைப் புதுப்பித்து பாதுகாத்தல்
- தினசரி ஊதியம் மற்றும் மேலதிக ஊதியத்தின் தரவுகளை சரிபார்த்தல்
- புகையிரத உத்தரவுகளை வழங்குதல்
- அங்ரகார (Agrahara)காப்பீடு கூற்றுக்கள் செலுத்துதல் தொடர்பான நடவடிக்களை மேற்கொள்ளல்
- அனைத்து அலுவலர்களின் தனிப்பட்ட கோப்புகளைப் புதுப்பித்தல், பாதுகாத்தல்
- அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு செயலாளர், அரசாங்க சேவை ஆணைக்குழு, அரசாங்க நிர்வாக முகாமைத்துவ அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் திணைக்களத்திற்கிடையில் கடிதங்கள் பரிமாற்றம்
- இடமாற்றங்கள், தேர்வுகள், ஓய்வுபெறல் தொடர்பான விடயங்களை கையாளல்
- (உள்ளூர் மற்றும் வெளிநாட்டு) பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- தினசரி பத்திரிகை வாங்கல், கட்டிட வாடகை, அலுவலக கழிவகற்றல், நீர் மற்றும் மின்சார விநியோகம், அலுவலக சுத்தம் செய்தல், அலுவலக சுத்தம் செய்தல், பாதுகாப்பு சேவை, போக்குவரத்து, எரிப்பொருள் விநியோகம்,தொலைப்பேசி கட்டணம் மற்றும் அவை சார் கோப்புகளை பராமரித்தல்
- கடன்தொடர்பான பதிவுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- தபால் முத்திரை இயந்திரத்தை பராமரித்தல்
- கொள்முதல் செய்தல், வீட்டு வாடகைக்கு மதிப்பீடு செய்தல், சேவை ஒப்பந்தங்களை பராமரித்தல்.
அடைவுகளுக்கு
இல: 75 1/3, 1 வது மாடி, ஹேமாஸ் கட்டிடம்,
யோர்க் வீதி,
த.பெ.இல - 559,
கொழும்பு 01,
இலங்கை.
(94) 112 326 774
(94) 112 328 486
deptimpt[at]sltnet.lk