1969 ஆம் ஆண்டின் 1ம் இலக்க சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் 50 வருடங்களாக தமது செயற்பணியினை நாட்டுக்காக மேற்கொள்கிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு செய்யும் நோக்கினை முன்னிலைப்படுத்தி இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது அதற்குரிய கொள்கை உருவாக்குனர்களின் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

தற்பெழுது திணைக்களத்தின் பணி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முறைமையினை அமுல்படுத்துவதையும் கடந்து சர்வதேச வர்தகம் பற்றிய கொள்கை ரீதியான தீர்மானம் எடுப்போராகவும் செயற்படுகின்றது. இத்திணைக்களம் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் நலன்புரி, சுற்றாடல் மற்றும் பொது சகாதார பாதுகாப்பு ஆகியவற்றை பிரதான குறிக்கோள்களாக கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு முறைமையிலிருந்து அவற்றிற்கான ஒழுங்கு முறைகளை மேம்படுத்தல் வரை வியாபித்திருக்கினறது.

மேலும் சர்வதேச வர்தகத்தில் இலங்கை அடையாளத்தினை பாதுகாக்கும் விதத்தில் ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக நியம முறையொன்றினை அறிமுகம் செய்தலும் இத் திணைக்களத்தின் பிரதான பணிகளில் உள்ளடங்குகின்றது. செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து அந்நிய செலாவணிக் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளினை அமுல்படுத்துவதுவதற்கு நடவடிக்கை எடுத்தல் புதிய முன்னெடுப்பொன்றாகும்.

இலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட பேசல், ஸ்ரொக்கோம் மற்றும் றொட்டர்டாம் ஆகிய சர்வதேச சமவாயங்களினை பின்பற்றி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சுற்றாடலுக்கும் பொது மக்களுக்கும் கேடு விளைவிக்கின்ற கிளைபோசெற் போன்ற இரசாயன பதார்தங்களின் இறக்குமதி கட்டுப்பாடு அல்லது தடைசெய்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்துகள் தொடர்பாக இரண்டில் மூன்று பங்கு ஆயட்காலத்தினை கட்டாயமாக்குதல், காலாவதியான மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதனை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட முக்கியமான செயற்பாடாகும்.

இலங்கை சேது மார்கம் மற்றும் இந்து சமுத்திரத்தின் மிக விசேடத்துவமான இடத்தில் அமைந்துள்ளதுடன் சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் விசேடமாக மீள் ஏற்றுமதி மையமாக இனங்காணப்பட்டுள்ளது. சீனா மற்றும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகின்ற புதிய பொருளாதார மேம்பாட்டு நிகழ்சித்திட்டங்களில் தேசிய ரீதியாக உயர் கொள்கை வேலைச் சட்டகமொன்று இருத்தல் மிக முக்கியமாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுத் திணைக்களம் கடந்த காலங்களில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பில் கொள்கை ரீதியாக மிக முக்கியமான தீர்மானங்களை எடுத்துள்ளதுடன் சர்வதேச ரீதியாக வெளிநாடுகளுடன் பரஸ்பர தொடர்புகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.