2024 ஆம் ஆண்டிற்கான கூட்டு உரிமங்கள் வழங்குதல் 2023.12.01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு தகைமையுடைய இறக்குமதியாளர்கள் நிகழ்நிலையூடாக அதற்கு விண்ணப்பிக்க முடியும்.
- மேலும், 2023.12.31 ஆம் திகதியன்று காலாவதியாகும் கூட்டு உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை 01.31 வரை நீட்டிப்பு செய்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது. ( அனைத்து கால நீட்டிப்பு செய்யப்படும் கூட்டு உரிமங்களினதும் கப்பலேற்றிய ஒப்பந்தச் சீட்டின் (BL) திகதி 2023.12.31 ஆம் திகதிக்கு முன்னராக இருத்தல் வேண்டும்.)
- தற்போதைய பெறுமதியுடைய கூட்டு உரிமங்களின், பெறுமதியைக் கூட்டுவதற்காக 12.01 வரை மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
- ஒரு உரிமத்தின், செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பு செய்தல் மற்றும் பெறுமதியை அதிகரித்தல் ஆகிய இரண்டு திருத்தங்களையும் செய்வதற்கு முடியாது.
கட்டுப்பாட்டாளர் நாயகம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்