கோதுமை மாவு (HS குறியீடு 1101.00.10) இறக்குமதியானது 14.06.2023 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2023.06.14 ஆம் திகதிய 2336/45 ஆம் இலக்கம் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி மூலம், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமத்தின் (ICL) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தொடர்பான பின்வரும் நிகழ்வுகளுக்கு இத்திணைக்களத்தினால் இறக்குமதி உரிமம் வழங்கப்படும்.
- • கோதுமை மாவின் இறக்குமதி செய்யப்பட்ட இருப்புக்கள் 14.06.2023 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன் கப்பலேற்றப்பட்டிருக்க வேண்டும் (இலங்கையின் துறைமுகத்தை 30.06.2023 அன்று அல்லது அதற்கு முன் வந்தடைய வேண்டும்).
- • கோதுமை மாவு இறக்குமதிக்காக 14.06.2023 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன் கடன் கடிதம் (TT) நிறுவப்பட்டிருத்தல் (இலங்கையின் துறைமுகத்தை 13.08.2023 ஆம் திகதிக்கு முன் வந்தடைய வேண்டும்).
- • கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு 14.06.2023 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன் முன்பணம் செலுத்தப்பட்டிருத்தல் (இலங்கையின் துறைமுகத்தை 13.08.2023 ஆம் திகதிக்கு முன் வந்தடைய வேண்டும்).
13.06.2023 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் இலங்கையின் துறைமுகத்தை வந்தடைந்த கோதுமை மாவை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் பெற வேண்டிய அவசியமில்லை.