HS-குறியீட்டு உரிமம் தொடர்பான அனுமதி

HS-குறியீடு மற்றும் பெயர் மூலம் தேடுக

Policies

 Not Available

அட்டவணை iv

தொ.இ. விடயம் ஆவணக் கட்டணம்
1 செல்லுபடியாகும் நாணயக் கடிதத்தை பெறுவதற்கு முன்னர் கப்பலில் ஏற்றப்பட்ட வாகனம் (LC) ரூ. 1,000/- (வாகனமொன்றுக்கு)
2 செல்லுபடியாகும் நாணயக் கடிதம் திருத்தப்படுவதற்கு முன்னர் கப்பலேற்றப்பட்ட வாகனம் (LC) ரூ. 500/- (வாகனமொன்றுக்கு)
3 நாணயக் கடித நிபந்தனைகளை மீறல் (LC) ரூ. 1000/- (நிபந்தனையொன்றுக்கு)
4 ஏனைய இறக்குமதி ஆவணங்களுடன் வாகன செசி இலக்கம் வேறுபடல் ரூ. 500/- (வாகனமொன்றுக்கு)
5 இறக்குமதி ஆவணங்களில் குறைபாடுகள் ரூ. 500/- (வாகனமொன்றுக்கு)
6 இலங்கை சுங்கத்திலிருந்து சரக்குகளை விடுவிப்பதற்கான அங்கீகாரம் ரூ. 1000 (வாகனமொன்றுக்கு)
7 முதிர்வுத் திகதியிலிருந்து 180 நாட்களுக்கு மேற்பட்ட (D/A) கொடுப்பனவு பட்டியல்களுக்கு எதிரான ஆவணங்கள் ரூ. 1000/- (வாகனமொன்றுக்கு)
8 முற்கொடுப்பனவுகளுக்கான அங்கிகாரம் ரூ. 1000/- (விண்ணப்பமொன்றுக்கு)
9 முற்கொடுப்பனவின் ஊடாக கொடுப்பனவு செய்யப்பட்ட பின்னர் வந்தடைந்த சரக்கு ரூ. 1000/- (விலைப்பட்டியலொன்றுக்கு)
10 அந்நிய செலவாணி அல்லாத இறக்குமதி தொடர்பான முன் அனுமதி (NFEI) ரூ. 500 (விலைப்பட்டியலொன்றுக்கு)
11 அந்நிய செலவாணி அல்லாத இறக்குமதிக்கு பின்னரான அனுமதி (NFEI) ரூ. 1000/- (விலைப்பட்டியலொன்றுக்கு)
12 நாணயக் கடித நிபந்தனைகளை மீறல் (வாகனங்கள் தவிர) ரூ. 500/- (விலைப்பட்டியலொன்றுக்கு)
13 ஏனையவை ரூ. 1000/- (விலைப்பட்டியலொன்றுக்கு)
செயற்பாடுகள் கால வரையறை
1. இனங்காணப்பட்ட சரக்குகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை தடுத்தல், கட்டுப்படுத்தல், ஒழுங்குவிதிகளின் திருத்தம் கொண்டு வரல் போன்ற விடயங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடல் மற்றும் கால அடிப்படையில் சுங்கத் திணைக்களத்தினால் புதிய சுங்க வகைப்படுத்தல் குறியீடுகளை அறிமுகம் செய்த பின்னர் அனுமதிப் பத்திரம் தேவையான பொருட்கள் தொடர்பில் வர்த்தமான அறிவித்தல்களை வெளியிடல்
2. பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையின் அங்கிகாரத்திற்காக வர்த்தமானி அறிவித்தல்களை சமர்ப்பித்தல்
மாதம் அல்லது அதற்கு மேல்
3. அந்நிய செலவாணி அடிப்படையிலல்லாத இறக்குமதிகளுக்கான அங்கிகாரத்தை வழங்குதல் 20 நிமிடங்கள்
4. வங்கி ஒழுங்குவிதிகள் மீறல் தொடர்பில் வங்கி மற்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அங்கிகாரம் வழங்குதல் 01 மணித்தியாலம்
5. கொடுப்பனவு முறை தொடர்பான நிபந்தனைகளை மீறியமையின் காரணமாக வங்கியினால் நிறுத்தி வைக்கப்பட்ட ஆவணங்களை விடுவிப்பதற்கான அங்கிகாரத்தை வழங்குதல் 01 மணித்தியாலம்
6. வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிப்பதற்கு இயலாது போகும் சந்தர்ப்பத்தில் முற்கொடுப்பனவுகளை செய்வதற்கான அங்கிகாரத்தை வழங்குதல் 01 வாரம்
7. மீள் ஏற்றுமதிக்கான அங்கிகாரத்தை வழங்குதல் 01 மணித்தியாலம்
8. (D/A) ஒப்புதலுக்கு எதிரான ஆவணங்கள் மற்றும் திறந்த கணக்கு தொடர்பான கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரத்தை வழங்குதல் 20 நிமிடங்கள்

தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்
  • உரிய வங்கியினால் வழங்கப்பட்ட கடிதம் அல்லது குறிப்பு
  • வணிக விலைப்பட்டியல்
  • சரக்குப் பட்டியல்
  • நாணயக் கடிதம்

வாகனமொன்றை இறக்குமதி செய்யும் போது, இவற்றுக்கு மேலதிகமாக, பின்வரும் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்

  • சரக்குகளை கப்பலேற்ற முன்னரான ஹொலோகிராம் இலச்சினை பொறிக்கப்பட்ட சரக்குப் பரிசோதனைச் சான்றிதழ்
  • வெளிநாட்டு வங்கியின் இலச்சினையுடன் முத்திரையிடப்பட்ட பதிவு இரத்துச் செய்தல் சான்றிதழ்
  • ஒடோமீட்டர் சான்றிதழ்

செயல்முறை

  • கொள்கைப் பிரிவிற்கு மேற்கூறப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
  • அங்கிகரிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கொடுப்பனவு உறுதிச்சீட்டைப் பயன்படுத்தி காசாளரிடம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்
  • கொடுப்பனவுக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை பிரிவுக்கு சமர்ப்பித்தல்
  • பிரிவிலிருந்து அனுமதிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளல்

கொடுப்பனவுகள் - ஒரு வாகனத்திற்கு ரூ. 1,000.00

  • பயன்படுத்திய மோட்டார் வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் கப்பலேற்ற முன்னரான சரக்கு பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பதில் மேலதிகமாக ரூபா. 200,000.00 கட்டணமாக அறவிடப்படும்.