TIEP (Temporary Import and Export Processing) திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்கள் அந்நிய செலாவணி அல்லாத (Non Foreign Exchange - NFE) அடிப்படையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்காக இறக்குமதி உரிமங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிமங்களை பெற பின்வரும் நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும்.

  1. இந்த துறையின் கொள்கை பிரிவில் இருந்து NFE ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்கான NFE விண்ணப்பம் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்டு அந்த பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(NFE ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்க பின்வரும் வலைத்தளத்தினைப் பயன்படுத்துவும்  - http://www.imexport.gov.lk/images/Policy/Forms/F2.pdf)

  1. NFE ஒப்புதல் பெற்ற பிறகு, தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை​ இத் திணைக்களத்தின் அலகு 05 இல் பெற வேண்டும். உரிமத்திற்கான விண்ணப்பத்தை எங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் பொருத்தமான ஆவணங்களை யூனிட் 05 க்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.

(உரிம விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்க பின்வரும்வலைத்தளத்தினைப் பயன்படுத்துவும்- http://www.imexport.gov.lk/images/Applications/Miscellaneous_N.pdf)

TIEP திட்டத்தின் கீழ் இறக்குமதிக்காக அங்கீகரிக்கப்பட்ட தங்கம் மீள் ஏற்றுமதிக்கு மாத்திரம் பயன்படுத்தப்படல் வேண்டும் மற்றும், எந்த சூழ்நிலையிலும் உள்ளூர் சந்தைக்கு வெளியிடக்கூடாது.