சீனி இறக்குமதி செய்யும் எந்தவொரு இறக்குமதியாளரும் சீனியை கப்பலேற்றுவதற்கு முன்னர் இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியைப் பத்திரத்தினை பெற வேண்டும். இந்த விதி சீனி பிணைக்கப்பட்ட (To Bond) இறக்குமதிகளுக்கும் பொருந்தும். மேலும், இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதியைப் பத்திரத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட சீனி பிணைக்கப்பட (To Bond) முன்னர் இத்திணைக்களத்தில் பற்றுச் சீட்டு பெறப்பட வேண்டும்.